கைப்பணி பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு

Monday, 24 September 2018 - 16:55

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கைப்பணி பொருட்களின் ஏற்றுமதி கடந்த வருடத்தில் 11 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆறு கோடியே பத்து லட்சம் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கு முந்தைய ஆண்டான 2016ஆம் ஆண்டில் ஐந்து கோடியே 60 லட்சம் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டன.

அதிக வருவாய் பொம்மை, மட்பாண்ட மற்றும் பித்தளை கைப்பணிப் பொருட்களின் மூலமே பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஆறு நாள் கண்காட்சியின் போது தேசிய கைப்பணிப் பொருட்களின் விற்பனை மூலம் ஒரு கோடியே 82 லட்சம் ரூபா பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, 21 லட்சம் ரூபா பெறுமதியான விற்பனை கட்டளைகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பணி பொருள் விற்பனை மூலம் அண்மையில் பெறப்பட்ட அதிக தொகை இதுவாகும் என தேசிய கைப்பணி சபையின் ஹேஷனி போகல்லாகம தெரிவித்துள்ளார்.







Exclusive Clips