Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+65+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Friday, 12 October 2018 - 7:54
கிழக்கில் விவசாய விரிவாக்கல் தொழிநுட்ப உதவியாளர்கள் 65 பேர் நியமனம்
203

Views

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் விவசாய விரிவாக்கல் தொழிநுட்ப உதவியாளர்கள் 65 பேருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை உவர்மலை விவேகனந்தாக்கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நியமனங்கள் , போட்டிப்பரீட்சை மூலம் நியமனதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய வழங்கப்படுகின்றன. 

கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமாக உள்ள பதவிகள் வெகு விரைவில் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும் கிடைக்கப்பெறுகின்ற அரச நியமனத்தை பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முன்னின்று செயற்பட வேண்டும் என்று இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்தன கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE