5+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88
Friday, 09 November 2018 - 8:06
5 சதவீதத்தால் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை
474

Views
கடந்த மாதம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை தசம் 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 
 
சுற்றுலாத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 
 
இந்தியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையானவர்கள் வந்திருப்பதுடன், அடுத்தபடியாக சீனா, பிரித்தானிய ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 
 
ஆண்டு நிறைவடையும் போது 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE