சர்வதேச சந்தையில் மசகெண்ணெய் விலை வீழ்ச்சி

Wednesday, 14 November 2018 - 13:54

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
சர்வதேச சந்தையில் மசகெண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.

மசகெண்ணெய்க்கான கேள்வி வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் கடந்த எட்டு மாதங்களில் அதிகுறைந்த விலை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரெண்ட் மசகெண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7 சதவீதத்தால் குறைவடைந்து தற்போது 65.11 அமெரிக்க டொலர்களாக நிலவுகிறது.

இது கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் பதிவாகும் அதிகுறைந்த விலையாகும்.

அத்துடன் மேற்கு டெக்ஸாஸ் மத்தியநிலை மசகெண்ணெய் விலையும் 7 சதவீதத்தால் குறைவடைந்து 55.69 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டு நொவம்பர் மாதத்துக்குப் பின்னர் ஏற்பட்ட அதிகூடிய விலைச் சரிவாகும்.

அடுத்த ஆண்டுக்கான எண்ணெய் கேள்வி குறைவடையும் ஒன்று ஒபெக் நாடுகளின் அமைப்பு முற்கூட்டிய கணிப்பீட்டை வெளியிட்டிருந்தமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.







Exclusive Clips