இலங்கை மகிழூந்து சந்தையை இழந்து வரும் இந்தியா!!

Sunday, 18 November 2018 - 19:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21%21
இலங்கையின் பொருளாதார கொள்கை ரீதியான தீர்மானத்தின் காரணமாக, இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் மகிழூந்து இறக்குமதிகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியைக் காட்டுவதாக இந்திய மகிழூந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மகிழூந்து உற்பத்தி சம்மேளனத்தின் பிரதிப் பணிப்பாளர் சுகாடோ சேன்னின் கருத்துப்படி, முன்னொரு காலத்தில், இலங்கைக்கு வருடமொன்றிற்கு பில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்ளை இந்தியா ஏற்றுமதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 அல்லது 4 வருடங்களுக்கு முன்னதாக அது 300 மில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சி அடைந்திருந்தது.

இந்த நிலையில், 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் அந்த ஏற்றுமதி வருமானம், 36 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவின் பிரதான மகிழூந்து விற்பனை சந்தையாக விளங்கும் இலங்கையின் சந்தையின் விகிதாசாரம் தமக்கு இல்லாது போவதாக இந்திய மகிழூந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது..







Exclusive Clips