Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
Wednesday, 05 December 2018 - 14:07
தரப்படுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது..
2

Shares
284

Views
தரப்படுத்தல் நிறுவனங்களினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
ஃபிட்ச் மற்றும் எஸ்.என்ட்.பி தரப்படுத்தல்களில் இலங்கை முன்னதாக பி பிளஸ் எனும் தரநிலையில் இருந்தது.
 
அந்த தரநிலையை மாற்றி பி தரநிலை வழங்கப்பட்டுள்ளது.
 
இது நாட்டின் பொருளாதார அடிப்படைகளின் மீதான ஊர்ஜிதப்படுத்தப்படாத அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
 
நாட்டின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட அண்மைய நிலைமைகளுக்கு மத்தியிலும், பொருளாதாரத்தின் மீதும், கடன் கொடுப்பனவுக் கடப்பாடுகளின் மீதும் தாக்கங்களைக் குறைப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து அதிகளவான வழிமுறைகளை மேற்கொண்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE