குழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்

Saturday, 08 December 2018 - 13:37

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாத்தில் 1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 16.8 வீத வளர்ச்சியாகும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா அதிகார சபையின் புதிய தகவல்களுக்கு அமைய, இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 20 லட்சத்து 80 ஆயிரத்து 627 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியர்களின் வருகையானது கடந்த மாதத்தில் 21.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









Exclusive Clips