Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 08 December 2018 - 20:05
வடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்
49

Views
வடக்கின் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி நேற்று காலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு, தேசிய கைத்தொழில் முயற்சி அதிகாரசபை, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கண்காட்சியில், இயற்கை விவசாய பயிர்கள், மா, எண்ணெய், பனை, பால் போன்ற உற்பத்திப்பொருட்களும்

துணி மற்றும் ஆடை வேலைப்பாடுகள், கடதாசி உற்பத்திகள், மூலிகை குடிபானங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகள் உள்ளடங்கிய காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE