Hirunews Logo
2018+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 12 December 2018 - 8:20
2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்
38

Views
2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

நவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த கண்காட்சி நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படுகிறது.

உள்நாட்டு, வெளிநாட்டு விவசாய துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன.

அத்துடன், விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் நவீன விவசாய தொழிநுட்ப முறைமையை இலங்கை விவசாய சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதும் உள்நாட்டு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வியை ஏற்படுத்துவதும் இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE