அறுவடை காலத்தில் நெல் கொள்வனவு

Monday, 14 January 2019 - 13:30

%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வருடா வருடம் ஏற்படும் விவசாயிகளின் நெல் விற்பனைப் பிரச்சனைகளைத் தவிர்க்கும் வகையில் அரசாங்க அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு, மணல்பிட்டி, தும்பங்கேணி, கரடியனாறு, புலிபாய்ந்தகல், கஜுவத்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள களஞ்சியசாலைகளில் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நடமாடும் நிலையங்கள் ஊடாகவும் பல பிரதேசங்களில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

விவசாயிகளுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு நெல் 38 ரூபாய் வீதமும், சம்பா நெல் 41 ரூபா வீதமும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
 







Exclusive Clips