பிற்போடப்பட்டுள்ள கூட்டம்...

Tuesday, 15 January 2019 - 19:44

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் ஹர்ஷா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள கடுமையான பனி புயல் காரணமாகவே இலங்கையுடனான கூட்டம் உட்பட பல முக்கிய சந்திப்புக்கள் பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையிலான இலங்கை குழுவினர் ஏற்கனவே வாஷிங்டன் சென்றுள்ளனர்.

மேலதிக நிதி வசதி வாய்ப்பினை பெறுவது குறித்து இந்த குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையை காரணம் காட்டி, சர்வதேச நாணய நிதியம் கடந்த நொவம்பர் மாதம் நிதி வழங்குவதை இடை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips