துரித அபிவிருத்தித் திட்டம்

Wednesday, 16 January 2019 - 8:05

+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக விவசாயம் கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








Exclusive Clips