Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
Monday, 21 January 2019 - 7:50
இலங்கை மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து
1

Shares
188

Views
இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைந்துகொள்வதும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே அது குறித்த ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வரட்சி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களை தாங்கக்கூடிய நெல் வகை உற்பத்திக்காக அனைத்து நாடுகளுக்கும் மரபணுக்களை வழங்குகின்றது.

அதுகுறித்த ஒப்பந்தம் ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் சென்றிருந்த போது, கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE