இலங்கையிடமிருந்து கைநழுவும் ஈரானின் தேயிலைச் சந்தை

Tuesday, 22 January 2019 - 20:56

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
ஈரானின் தேயிலைச் சந்தை இலங்கையிடம் இருந்து இந்தியா நோக்கி நகரும் நிலை உருவாகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் மொத்த தேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தை ஈரான் வருடாந்தம் கொள்வனவு செய்கிறது.

இந்தியா, இலங்கை மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்தே ஈரான் அதிக அளவான தேயிலையை இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஈரான் இறக்குமதி செய்கின்ற தேயிலையின் அளவை குறைத்துக் கொண்டது.

தற்போது இந்தியாவில் இருந்து தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஈரான் ஆரம்பித்திருப்பதாக, எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.







Exclusive Clips