அதிகரிக்கப்பட்டுள்ள பால்மா விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Sunday, 17 March 2019 - 19:51

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+
அதிகரிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இந்த வருடத்தின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தேசிய பால் மா உற்பத்தியாளர்களை கருத்திற் கொண்டே, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைவிட தேசிய பால்மாவின் விலைகள் குறைவாகவே நிர்ணயிக்கப்படும்.

எவ்வாறாயினும் உலக சந்தையில் பால்மாவின் விலைகள் குறைவடையும் போது, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளும் குறைவடையும்.

உலக சந்தையில் இந்த வருடம், நொவம்பர் மற்றும் டிசெம்பர் காலப்பகுதியில் பால்மாவின் விலைகள் குறைவடைய கூடும் எனவும் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.







Exclusive Clips