நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்

Tuesday, 19 March 2019 - 8:24

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பமாக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களுக்கு நெல்லைக் கொண்டு வருவதற்கு முடியாத விவசாயிகளுக்காக இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அந்த சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிவிப்பதற்காக அடுத்த வாரம் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருகிறநிலையில், நெல் சந்தைப்படுத்தும் சபை இதுவரையில் 16 ஆயிரத்து 560 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.







Exclusive Clips