%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 20 March 2019 - 19:09
களஞ்சியசாலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்
76

Views
எண்ணெய் சுத்திகரிப்பு மையம் மற்றும் எண்ணெய் களஞ்சியசாலை என்பவற்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

ஹம்பாந்தொட்டையில் உள்ள மிரிஜிவலை ஏற்றுமதி வலையத்தில் இந்த மையங்கள் அமையவுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.85 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய நேரடி வெளிநாட்டு முதலீடு இதுவாகவும் கருதப்படுகிறது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE