%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
Thursday, 21 March 2019 - 15:25
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து..
59

Views
இலங்கை - தாய்லாந்து வர்த்தக பேரவைக்கும், தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை - தாய்லாந்து வர்த்தக பேரவை, இரண்டு நாடுகளின் அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரை வர்த்தக நடவடிக்கைகளின் நிமித்தம் இணைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தாய்லாந்தின் முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE