%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88....
Tuesday, 09 April 2019 - 7:43
அத்தியாவசிய பொருட்களுக்கு விசேட சலுகை....
5

Shares
643

Views
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு விசேட சலுகைகளை வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
 
இதற்கமைய அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கும் அமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பானது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மக்கள் கூடிய பயனை பண்டிகை காலத்தின் போது பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சதொச நிறுவனத்தின் வருவமானமும் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் எனவும், அதன் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE