%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Tuesday, 09 April 2019 - 20:34
கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு
5

Shares
688

Views
கடந்த மாதம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வரவு 4.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு இலங்கைக்கு மொத்தமாக 2 லட்சத்து 33 ஆயிரத்து 382 வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்.

எனினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 328 பேர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து 49 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்தியா, பிரித்தானியா, சீனா, ஜேர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE