+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88++%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Wednesday, 10 April 2019 - 13:39
கிண்ணியாவில் முருங்கை உற்பத்தி அதிகரிப்பு
4

Shares
544

Views
திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில், இந்தமுறை  முருங்கைக்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தற்போது முருங்கைக்காய் அறுவடை காலம் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்தவருடம் முருங்கைக்காயின் விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால் முருங்கைக்காயின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதங்களில் ஒரு கிலோ முறுங்கைக்காய் 100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 

எனினும் தற்போது மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ முருங்கைக்காய் 70 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பட்டு, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இதற்கமைய, கிண்ணியாவிலிருந்து நாளொன்றுக்கு 10 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் கிலோ கிராம் முருங்கைக்காய் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE