மரக்கறிகளின் விலை பாரியளவில் வீழ்ச்சி!

Saturday, 20 April 2019 - 19:52

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 80 சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டை தொடர்ந்து இன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரியளவில் மரக்கறிகள் கிடைக்கப் பெற்றிருந்த போதும் , அதனை வாங்குவதற்கு போதியளவான வர்த்தகர்கள் வருகை தராத காரணத்தால் இவ்வாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் முகாமைத்துவம் தெரிவித்தது.

தற்போதைய நிலையில் , போஞ்சி , கத்தரிக்காய் , பைற்றங்காய் , புடலங்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஆகிய மரக்கறிகள் பொருளாதார மத்திய நிலையத்தில் பாரியளவில் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.







Exclusive Clips