%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 25 April 2019 - 7:49
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
4

Shares
550

Views
2019 பெப்ரவரியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 451 மில்லியன் டொலருக்கு குறுக்கமடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் கூடுதலான காலப்பகுதியில் மிகக்குறைந்த மாதாந்த பற்றாக்குறையினைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறையில் காணப்பட்ட கணிசமான குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 27.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையும் 2019 பெப்வரியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 7.2 சதவீதத்தினால் அதிகரித்தமையும் இதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.

இதேநேரம், சுற்றுலாத்துறையில், கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் மாதமொன்றிற்கு 2 இலட்த்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வருகைகளைப் பதிவுசெய்துள்ளது.

இதற்கமைய, 2019 பெப்ரவரியில் 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியை இது பதிவுசெய்தது என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE