%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 14 June 2019 - 13:06
இலங்கையில் நுகர்வோர் கேள்வி பலவீனமாக நிலவும்
39

Views
இந்த ஆண்டின் இறுதி காலாண்டு வரையில், இலங்கையில் நுகர்வோர் கேள்வி பலவீனமாகவே நிலவும் என்று முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் அதனை அடுத்த நிகழ்வுகளின் பின்னர், நுகர்வோர் கேள்வி மட்ட வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலைமை இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலான உணர்வு ரீதியான தீர்மானங்களின் படி இந்த மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக குறித்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE