கித்துள் உற்பத்தி ஆலையை வியாபார நிலையமாக ஆரம்பிக்க நடவடிக்கை

Sunday, 23 June 2019 - 19:00

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
கித்துள் உற்பத்தி ஆலையை வியாபார நிலையமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கித்துள் உற்பத்தியை அபிவிருத்தி செய்வது குறித்து அண்மையில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபையின் ஊடாக கித்துள் அபிவிருத்தி அதிகார சபையை அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னை, இறப்பர், தேயிலை, பனை ஆகியவற்றுக்கு தேசிய மட்டத்தில் அதிகார சபை அமைக்கப்பட்டுள்ள போதிலும் கித்துள் உற்பத்திக்கான அதிகார சபை ஆரம்பிக்கப்படவில்லை.

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் மாகாண மட்டத்தில் கித்துள் அபிவிருத்தி அதிகார சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதை தேசிய மட்டம் வரை கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கித்துள் அபிவிருத்தி அதிகார சபையை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த வருடம் சப்ரகமுவ மாகாணத்தில் 40 ஆயிரம் கித்துள் கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மாகாணத்தில் உள்ள 28 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.







Exclusive Clips