நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தில்...

Friday, 12 July 2019 - 14:18

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
 
 
 
 







Exclusive Clips