+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 14 July 2019 - 13:06
நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும்
160

Views
ஏற்றுமதி நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்றுமதி செயல்பாட்டினை நவீன முறையில் மாற்றுவதன் மூலம் மட்டுமே 6 முதல் 7 சத வீதமான வளர்ச்சியினை பெற முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை, அதில் இருந்து மீள்வதற்கு ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருவாயின் ஊடாக அதனை நிவர்த்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெறப்படும் ஏனைய வருவாயின் ஊடாக நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

இருப்பினும், அது தற்காலிய செயல்பாடாகவே அமையும்.

ஆனால், ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருவாயின் மூலமே நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையினை பேண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தலைமை நிறைவேற்று அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இதனை தெரிவித்துள்ளார்.

போட்டித் தன்மையை கொண்ட நாணய விகிதாசார கொள்கை ஒன்றினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது ஏற்றுமதிக்கு பெரும் உறுதுணையாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE