%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Saturday, 20 July 2019 - 8:10
ஈரானுடன் ஒப்பந்தம்..
189

Views
இலங்கை தேயிலை சபையும் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் 32 கோடி அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தேயிலை சபை 32 கோடி பெறுமதியான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.

இந்த தொகையினை இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறுவதன் மூலம், அதனை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு செலுத்த முடியும் என பெருந்தோட்ட துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியாக ஈரானுக்கு எதிராக நிதி பரிவர்தனை செய்வதற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்திற்கு அமைய பொருளாதார தடை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE