+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
Friday, 16 August 2019 - 7:58
சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து அவதானம்
116

Views
இலங்கையில் உள்ள நான்கு ஈச்சரங்களை மையப்படுத்திய சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இந்துமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும் போது இதனைக் கூறியுள்ளார்.

திருகோணேஸ்வரம், திருக்கேதீச்சரம், நகுலேஸ்வரம் மற்றும் முன்னேஸ்வரம் ஆகிய நான்கு ஈச்சரங்கள் இலங்கையில் உள்ளன.

அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா மற்றும் மலேசியாவில் இருந்து கதிர்காமத்துக்கு யாத்திரம் செல்கின்ற பக்தர்களுக்காகவும், சுற்றுலாத்துறையினருக்காகவும் மத்தளை சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக விசேட விமானசேவையை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE