%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D....
Friday, 16 August 2019 - 13:42
பயணிகள் படகு சேவை மீண்டும்....
114

Views
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சேவை யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும், நடைமுறை சிக்கல்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதனை மீள நடத்துவதன் மூலம் பயணிகள் போன்று, பொருட்களின் பரிமாற்றத்துக்கும் அத்தியாவசியமானதாக அமையும்.

அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும்.

இந்தநிலையில் அதனை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE