%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D..%21
Friday, 16 August 2019 - 19:36
இலங்கை தொடரூந்து சேவைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்..!
49

Views
இலங்கை தொடரூந்து சேவையினை நவீனமயப்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 16 கோடி அமெரிக்க டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

பிலிப்பீனஸ் தலைநகர் மனிலாவை தளமாக கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.

இந்த நிதியின் ஊடாக தொடரூந்து சேவையின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் என்பன மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடரூந்து சேவைக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் முதலாவது கடன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஜனதொகை 2050ஆம் ஆண்டளவில் 2 கோடி 50 லட்சமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் போக்குவரத்து நிபுணர் ஜோன் ஜியோஜற் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு ஏற்ற வகையில், இலங்கை தொடரூந்து சேவைகள் நாடளாவிய ரீதியாக மேம்படுத்தப்படுத்தப்படும் போது, இலங்கையின் கைத்தொழில் மற்றும் பொருளாதாரம் என்பன மேம்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இலங்கை தொடரூந்து சேவை வருடாந்தரம் 13 கோடியே 67 பயணிகளுக்கு தமது சேவையினை வழங்கி வருவதுடன், வருடாந்தரம் 20 லட்சம் தொன் சரக்குகளை கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE