2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா செலவீடு

Thursday, 22 August 2019 - 7:48

2+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+900+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
ஒருகொடவத்தயில் அமைக்கப்பட்ட கொரிய - இலங்கை தேசிய தொழில்பயிற்சி நிறுவனத்திற்காக அரசாங்கம் 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவினைச் செலவிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரிய - இலங்கை தேசிய தொழில்பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட உரையாறறியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நிறுவனம் கொரியாவின் எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்ட கடனுதவியினால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய சிந்தனைகளை உருவாக்கும் நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 







Exclusive Clips