%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...
Thursday, 22 August 2019 - 21:27
கடல் உயிரின உற்பத்தி ஆய்வு மத்திய நிலையம்...
80

Views
கடல் உயிரின உற்பத்தி ஆய்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தேசிய நீர் வள அபிவிருத்தி மற்றும் ஆய்வு முகவர் நிலையமான நாரா வளவில் இதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.

இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் கடல் உயிரின உற்பத்தி தொடர்பிலான ஆய்வு நடவடிக்கைகளுக்கு இவ்வாறான மத்திய நிலையம் ஒன்று இல்லாததன் காரணமாக அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மத்திய நிலையம் அமையப்பெற்றதன் பின்னர் இது தொடர்பான அனைத்து தடைகளும் நீங்கிவிடும் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் கடல் உயிரின உற்பத்திகளான கடல் அட்டைகளை வளர்த்தல், இறால் உற்பத்தி, கடல் தாவர உற்பத்தி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE