%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+2019%27+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+15+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 25 August 2019 - 13:30
'விருந்தக கண்காட்சி 2019' நொவம்பர் 15 முதல்
73

Views
இலங்கை விருந்தக பாடசாலை பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'விருந்தக கண்காட்சி 2019'எதிர்வரும் நொவம்பர் 15 முதல் 17 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

21வது முறையாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றனர்.

விருந்தக தொழில்துறை உற்பத்தி பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் இந்த துறையுடன் தொடர்பினை கொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் போது தமது சேவைகள் மற்றும் பொருட்களை காட்சிப்படுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கில், கடந்த 22 ஆம் திகதி ஒன்று கூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.

'விருந்தக கண்காட்சி 2019' இல் 300 இற்கும் அதிகமான சுற்றுலாத்துறை மற்றும் விருந்தக துறையுடன் சம்பந்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர் பங்கு கொள்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவது குறித்து, இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் புள்ளி விபரங்களுடன் விபரங்களை வெளியிட்டனர்.

குறிப்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தமது உரையில், பயங்கரவாதத்துடன் தொடர்பினை கொண்ட அனைத்து முஸ்லீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், விருந்தக துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆரம்ப வர்த்தக நடவடிக்கைகளுக்காக நிதி அமைச்சு இலகு சலுகை கடன் வழங்க முன்வந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE