பேசாலையில் மீன்பிடி துறைமுகத்தை நிர்மாணிக்க வேண்டுமென கோரிக்கை

Monday, 09 September 2019 - 19:17

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையில் மீன்பிடி துறைமுகத்தை நிர்மாணிக்கும்படி மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தவிர, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு சென்றிருந்த அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளிடம் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் வங்காலை பிரதேசத்தில் சுமார் ஆயிரம் கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அவர்கள் வாழும் பிரதேசங்களில் கடல் அரிப்பு இடம்பெறுவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் அரிப்பை தடுப்பதற்கு தற்போது உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு பதிலாக புதிய துறைமுகம் ஒன்றை நிர்மாணிப்பது அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.







Exclusive Clips