%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...
Tuesday, 10 September 2019 - 14:31
வெளிநாடுகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம்...
226

Views
இலங்கையில் விளையும் தானியங்களை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக உள்ளுர் விவசாயிகளுக்கான நன்மைகளை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவில் மத்திய நிலையம் ஒன்று நிறுவப்படவுள்ளது.
 
இதன்மூலம் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு இலங்கையில் விளையும் தாணியங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் உள்நாட்டில் சோளப்பயிர் செய்கை வீழ்ச்சி பெற்றுள்ளதால் கால்நடையின் உணவுகளை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE