சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப 150 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

Sunday, 15 September 2019 - 13:26

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+150+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக பணியகம் 150 கோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய சந்தைகளை கவனத்தில் கொண்டே பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் பணிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளே அதிக அளவில் செலவீனங்களை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம், சுற்றுலாத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கும் பல விதமான சலுகைகள் தற்போது வழங்கப்படுகின்றது.

இதன் மூலம் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் குறித்த தரப்பினர் அதிக கவனம் செலுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வெளிநாட்டவர்கள் இலங்கை வருவதற்கான நுழைவு அனுமதி கட்டணம் அகற்றப்பட்டதன் பின்னர், பல நாட்டவர்கள், குறிப்பாக இந்திய சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips