%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 24 September 2019 - 20:09
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்
3

Shares
465

Views
2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தனிநபர் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு இதுவரை விடுவிக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அதன் உரிமையாளர்கள் விடுவித்துக் கொள்வதற்காக நிவாரண காலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, தனிப்பட்ட பாவனைக்காக தனி நபரினால் இறக்குமதி செய்தல் மற்றும் குறித்த கடன் உறுதி கடிதங்கள் அவர்களின் பெயரில் திறக்கப்பட்டிருந்தால் வரி திருத்தத்தை பொருட்படுத்தாமல் , கடன் உறுதி கடிதங்கள் திறக்கப்படும் போது காணப்பட்ட உற்பத்தி வரியினை செலுத்தி குறித்த வாகனங்களை விடுவித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE