எக்ஸ்போ 2020' நிகழ்வுகளில் இலங்கை பங்குபற்றும்..

Saturday, 19 October 2019 - 8:14

%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B+2020%27+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
டுபாயில் நடைபெறவுள்ள 'எக்ஸ்போ 2020' நிகழ்வுகளில் இலங்கை பங்குபற்றும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அகமட் அலி இப்ராஹீம் அல் முல்லா, வர்த்தக சம்மேளனங்களில் தலைவர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றைய நிகழ்வின் போது, 'எக்ஸ்போ 2020' டுபாயில் இலங்கை பங்குபற்றுவது தொடர்பான இணையதளம் ஒன்றும் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

'எக்ஸ்போ 2020' எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி ஏப்பிரல் 2021 திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளது.

இந்த சர்வதேச நிகழ்வில் கலந்து கொள்ளும் இலங்கை, இலங்கையின் புதிய நவின மயமான கைத்தொழில்கள், மற்றும் முதலீடுகள் குறித்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிகழ்விற்காக 2 கோடியே 50 லட்சத்திற்கும் அதகிமானவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர்களில் 70 சதவீதமானவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருப்பர்.

ஆறு மாதங்கள் நடைபெறவுள்ள 'எக்ஸ்போ 2020' நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்வர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.









Exclusive Clips