இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் இணைந்து செயல்ப்படுகின்றன..

Monday, 11 November 2019 - 19:47

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9..
எதிர்கால பொருளாதார மேம்பாட்டை இலக்கு வைத்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் இணைந்து செயல்படுவதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.

'இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையேயான இரு தரப்பு வர்த்தகம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது படிப்படியாக மேம்பட்டு வரும் நிலையில், அவுஸ்திரேலிய வர்த்தக சமூகத்தவர்கள் பாரிய முதலீட்டை இலங்கையில் மேற்கொள்வதில் ஆர்வத்துடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மையான சுற்றாடலை ஏற்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் வருடாந்தம் 2 கோடியே 70 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் நிதி உதவி செய்துவருவதாக அவுஸ்திரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதன் முறையாக 150 கோடி அவுஸ்திரேலிய டொலர்களை கடந்துள்ளது.

அவுஸ்திரேலிய சந்தையில் இலங்கை தேயிலை மற்றும் புடவைகளுக்கு சிறந்த வரவேற்புள்ளதுபோல, அவுஸ்திரேலிய மரக்கறிகள், கோதுமை மா மற்றும் பால் உற்பத்தி பொருட்களை இலங்கை மக்கள் அதிக அளவில் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.







Exclusive Clips