+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
Tuesday, 12 November 2019 - 8:50
இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம்
134

Views
நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
 
சர்வதேச சந்தையில் எமது நாட்டின் இறாலுக்கு நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்காக இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தெளிவூட்டல்களை வழங்குவதற்கும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE