அதிரடியாக குறைந்த வாகனங்களின் விலை..!

Tuesday, 03 December 2019 - 14:17

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..%21
அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக வாகனங்களில் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன இறக்குமதியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து மற்றும் கனரக வாகனங்களின் விலை 50 ஆயிரம் ரூபாவினால் குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், ஏனைய வாகனங்களை கொள்வனவு செய்யும் போது வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, எனவே குறித்த விலைகளில் எவ்வித மாற்றமுன் ஏற்படாது என குறித்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, தொலைத்தொடர்பு வரி 25 வீதத்தினால் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த மாதம் தொடக்கம் தொலைபேசி கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நூற்றுக்கு 15 வீதமாக காணப்படும் தொலைத்தொடர்புகள் வரி நூற்றுக்கு 11.25 வரை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 15 வீதம் காணப்பட்ட பெறுமதி சேர் வரி நூற்றுக்கு 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கு 2 வீதமாக காணப்பட்ட தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொலைத்தொடர்பு சேவையில் தாக்கம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தொலைத்தொடர்பு கட்டணங்களும் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கையடக்க தொலைபேசிக்கான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் 5 நிறுவனங்கள் காணப்படுவதோடு, நிலையான தொலைபேசி சேவைகளை வழங்கும் 3 நிறுவனங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips