%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+..
Sunday, 19 January 2020 - 7:47
நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ..
307

Views
கடந்த ஆண்டு பெரும்போக பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பிக்கப்படவுள்ளதாக விவசாய காப்புறுதித் திணைக்களத்தின் பணிப்பாளர் பண்டுக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான நவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் நட்டஈடு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்காக 60 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இரசாயன உரங்களை பாவிப்பதன் மூலம் நிலத்திற்கும்இ நீருக்கும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாய அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் சந்திரசோம பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேதனப் பசளையை பயன்படுத்துவதன் மூலம் இந்த நிலையை தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கைவிடப்பட்ட வயல்காணிகள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் உள்ளதாக கண்டறியப்பட்டதுடன்இ கடந்த போகத்தில் அதில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE