கொழும்பு பங்குச் சந்தையில் மேலும் பல நிறுவனங்கள் பதிவு செய்யும்

Sunday, 19 January 2020 - 19:51

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு பங்குச் சந்தையில் மேலும் பல நிறுவனங்கள் பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டு காலப்பகுதியினில் இதனை எதிர்பார்ப்பதாக கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் ரே.அபயவர்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுத் தேர்தலின் பின்னர் பங்குச் சந்தை பட்டியலில் இணைந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டின் ஸ்திரத்தன்மை சிறந்த முறையில் உள்ளதாலும், பங்குச் சந்தையின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதனாலும், பல தரப்பினரும் தற்போது ஆவலுடன் உள்ளதாகவும் பங்குச் சந்தையின் தலைவர் தெரிவித்துள்ளார்.







Exclusive Clips