%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81
Saturday, 15 February 2020 - 13:02
மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு
35

Views
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் சேவைபுரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் சந்தைப்படுத்தும் சபைக் கிளை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.

இந்த திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விவசாயிகளால் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதற்காக விரைவான ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கியிருந்தார்.

இதற்கமைய நெல் பயிர்செய்கை இடம்பெறும் பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரசபையின் ஒத்துழைப்போடு செயற்பாடுகளை விரைவுப்படுத்துமாறு ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி மாலை 41 லட்சத்து 92 ஆயிரத்து 410 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE