இலங்கைக்கான வரிச்சலுகை வழங்கப்படும்..!

Sunday, 16 February 2020 - 13:00

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் பிரித்தானியாவால் 2021 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆடை ஏற்றுமதி சம்மேளனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகளில் 30 சதவீதம் பிரித்தானியாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றங்கள் 1.5 பில்லியன் ஸ்ரேலின் பவுனிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்;டுள்ளது.










Exclusive Clips