குறைந்துள்ள எரிபொருள் விலை

Tuesday, 18 February 2020 - 13:16

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
உலக சந்தையில் குறைந்துள்ள எரிபொருள் விலையின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்காக கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கொவிட் 19 தொற்று காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.
 
சீனாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொற்றால் அந்த நாடு மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதை குறைத்துள்ளது.

இதனால் உலக சந்தையில் கேள்விக்கு அதிகமாக மசகு எண்ணெய் உள்ளதால் அதன் விலை இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 







Exclusive Clips