பண்டாரநாயக்கா சர்வதேச வாநூர்தி நிலையத்தினை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்..!

Sunday, 23 February 2020 - 19:33

%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பண்டாரநாயக்கா சர்வதேச வாநூர்தி நிலையத்தினை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த விஸ்தரிப்பு பணிகளுக்கு 57 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானிய நிறுவனம் ஒன்று இந்த பணியினை பொறுப்பேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் வாநூர்தி துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வாநூர்தி விஸ்தரிப்பு பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் அதிகரித்து வரும் வாநூர்தி பயணிகள் சிறந்த சேவையினை பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளைஇ எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பண்டாரநாயக்கா சர்வதேச வாநூர்தி நிலையத்தின் ஊடாக வருடாந்தரம் 2 கோடி பயணிகள் பயணத்தை மேற்கொள்வர் என மதிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips