கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் தொடர்பில் விசேட அவதானம்

Tuesday, 25 February 2020 - 18:52

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் 15 ஆயிரத்து 150 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையும், 500 ஏக்கரில் உப உணவுச் செய்கையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்களில் தற்போதுள்ள நீர் கொள்ளவை கருத்திற்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நீரை சிக்கனமாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பது, கால்நடைகளை கட்டுப்படுத்துவது, மேலதிக விதைப்புக்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்தல்களையும் வழங்குவதற்கு இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.







Exclusive Clips