பாடம் புகட்டப்பட்ட நடிகை!

Saturday, 14 March 2015 - 13:10

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21

தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இந்தித் திரையுலகில் வாய்ப்பு கிடைத்ததும் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது குறைவு.

சிலர் எவ்வளவு தொகை கொடுத்தாலும் நடிப்பதே இல்லை. வளர்த்து விட்ட தமிழ் திரையுலகை மறந்த இது போன்ற நடிகைகளுக்கு தமிழ் திரையுலகமும் அதன் ரசிகர்களும் தகுந்த பாடம் புகட்ட மறப்பதில்லை.

இதற்கு சிறந்த உதாரணம் அசின், தமிழிலிருந்து இந்தித் திரைப்பட உலகுக்கு சென்ற அவர் தமிழ் படங்களில் நடிப்பதை முற்றாக தவிர்த்து வந்தார். எனினும் பின்னர் அங்கு வாய்ப்பு குறைந்ததும் தமிழ் திரையுலகுக்கு மீண்டும் திரும்ப முயற்சித்தார், மேலும் அரசியல் சார்ந்த விடயங்களிலும் அவர் சர்ச்சைக்குள்ளானார். இதனால் அவரால் மீண்டும் தமிழ் திரையுலகினுள் நுழைய முடியவில்லை.

இப்போது அவரை முற்றாக மறந்தே போய்விட்ட து திரையுலகம்.

இதேபோல் தமிழ் படங்களில் நடித்தால் கூட தெலுங்கு , இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் இலியானா. இடையழகி என வர்ணிக்கப்படும் இலியானா , தமிழ் சினிமாவை உதாசீனப்படுத்துவதில் குறியாக இருந்தவர்.

தமிழ் படங்களே வேண்டாம் , இந்தி மற்றும் தெலுங்கே உயர்ந்தது என்ற நினைப்பில் இருந்த இவருக்கு திரைப்பட வாய்ப்பு நன்றாக குறைந்து விட்ட தாம்.

இதனால் குத்துப்பாடலுக்கு ஆடும் நிலைக்கு வந்துவிட்டாராம் , ஒரு காலத்தில் முதற்தர தெரிவாக இருந்த இவரின் நிலை கண்டு சிரிக்கிறது கோடம்பாக்கம்.

தமிழ் திரையுலகை உதாசீனப்படுத்திய இவருக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளதாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர். அசின் வரிசையில் தற்போது இலியானாவும் சேர்ந்துகொண்டார்.








Exclusive Clips